பிரபல பாலிவுட் தம்பதி சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி சொன்ன குட் நியூஸ்...

kiara

பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான நடிகை கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு குழந்தை பிறக்கஉள்ளதாக அறிவித்துள்ளனர். 


பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் கியாரா அத்வானி.  சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தில் நாயகியாக நடித்தார். மேலும் தொடர்ந்து  தெலுங்கு, இந்தி படங்களில்  நடித்து வருகிறார். இந்நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கிய ஷேர்ஷா படத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் இணைந்து நடித்தார். அதன் பின்  இருவருக்கும் காதல் ஏற்பட்டதால்,  கடந்த 2023 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். kiara


 திருமணாமாகி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக  கியாரா மற்றும் சித்தார்த் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர்.   அந்த பதிவில், தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு என தங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தையை குறிப்பிட்டுள்ளனர். 

 

Share this story