‘பகாசூரன்’-ஐ பாராட்டிய பாலிவுட் இயக்குனர்... நட்டி, செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள் !

Bakasuran

‘பகாசூரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பாராட்டு தெரிவித்துள்ளார். 

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் மோகன் ஜி. தற்போது அவரின் அடுத்த படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Bakasuran

செல்வராகவனுடன் இணைந்து நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தாராக்ஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, சசிலையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Bakasuran

மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நேற்று முன்தினம் திரையரங்கில் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தென்னிந்தியாவில் ‘பகாசூரன்‘ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதை கேட்டு வருகிறேன். என்னுடைய நண்பர் நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். 


 

Share this story