கோலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

கோலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். 

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

கோலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

அதன்படி, படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசிலும் நடிக்கின்றனர். இந்நிலையில், படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story