பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்காங்க... உறவினர்கள் சொன்ன ஹாப்பி நியூஸ் !

bombay jayasree

பாம்பே ஜெயஸ்ரீ உடல் நிலை குறித்து முக்கிய அப்டேட்டை அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். 

பிரபல கர்நாடக பாடகியாக இருப்பவர் பாம்பே ஜெயஸ்ரீ. சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் அவர், பல சூப்பர் ஹிட் பாடல்களை தனது இனிமையான குரலில் பாடியுள்ளார். இசை நிகழ்ச்சிகளில் பாடி வரும் அவர், லண்டனில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் பாட சென்றார். 

இதற்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் உடன் சென்றவர்கள் சந்தேகமடைந்து அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது மயங்கிய நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ இருந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

bombay jayasree

இதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் ரத்தக் கசிவு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வந்தனர். 

இந்நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ, உடல்நிலை குறித்து முக்கிய தகவலை அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். தற்போது அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் ஓய்வெடுக்க உள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான செய்திகளை தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

 

 

Share this story