ஏ.ஆர்.ரகுமான் வெளியிடும் ‘பொம்மை’ பட முதல் பாடல்... எஸ்ஜே சூர்யா பட அப்டேட் !

bommai

எஸ்ஜே சூர்யாவின் ‘பொம்மை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் நீண்ட நாட்களுக்கு முன்பு உருவான திரைப்படம் ‘பொம்மை’. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

bommai

இந்த படத்தை முன்னணி இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொமான்டிக் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. 

bommai

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘முதல் முத்தம்’ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெலோடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் நாளை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Share this story