‘பொம்மை’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘முதல் முத்தம்’ பாடல் வீடியோ வெளியீடு.

photo

இயக்குநராக அறிமுகமாகி இன்று ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும்  அடித்து தூள் கிளப்பும் எஸ். ஜே சூர்யா நடிப்பில் ‘பெம்மை’ திரைப்படம் தயாராகியுள்ளது.  இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ரிச்சர்ட்.எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

photo

 இந்த படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்ஏற்கனவே படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி நல்ல வரவேர்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலானமுதல் முத்தம்பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுவன் மற்றும் ஸ்வேத்தா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.

photo

கார்க்கி வரிகள் அனைத்துள்ள இந்த பாடலில் எஸ் ஜே சூர்யா  மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து ஆடி அழகிய ரொமான்டிக் பாடலாக மாற்றியுள்ளனர். விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Share this story