‘அடியே ராசாத்தி’... யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

பிரபல காமெடி நடிகரான யோகிபாபு, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை ‘நாயகி’. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்திலும், அவரது மகளாக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீமதி நடித்துள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கி வருகிறார்.சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ‘அடியே ராசாத்தி’ என்று தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.