என் முகத்தை வைத்து கிண்டல் - நடிகர் யோகிபாபு உருக்கம் !

என் முகத்தை வைத்து பலரும் கிண்டல் செய்துள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளனர்.
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’. வழக்கமான காமெடியனாக நடிக்கும் யோகிபாபு, இந்த படத்தில் தனது பெண் குழந்தைக்காக போராடும் தந்தையாக நடித்துள்ளார். விரைவில் வெளியாகும் இந்த படம் யோகிபாபுவிற்கு புதிய முகவரியை கொடுக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய யோகிபாபு, என்ன நான் காமெடியன் என்று எல்லா மேடைகளிலும் கூறி வருகிறேன். அதற்கு காரணம் என் தொழில் அது. படத்தில் நான் காமெடியனாக நடிக்க தெரு தெருவாக அலைந்திருக்கிறேன். என் முகத்தை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.
படத்தில் நடிக்கப்போது மேக்கப் போடுவேன். அப்போது என்னை திட்டுவார்கள். இதெல்லாம் எல்லா அறிமுக நடிகர்களுக்கும் நடப்பதுதான் என்றாலும், எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்துள்ளது. எப்பவுமே என் முகம் ஜோக்கர் முகம்தான். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த சினிமாவிற்கு சென்றாலும் நான் காமெடியன் தான் என்று உருக்கமாக கூறினார்.