நகைச்சுவை நடிகர் 'போண்டா மணி' காலமானார்.

photo

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் காலமானார்.

photo

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் பாக்கியராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலமாக சினிமாவுக்குள் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து நடித்த ஒரு காமெடியில் “ போலீஸ் வந்து கேப்பாங்க எதுவும் சொல்லிடாதீங்க, அடிச்சிகூட கேப்பாங்க அப்பவும் சொல்லீடாதீங்க” என கூறிய வசனம் அவரை மேலும் பிரபலமாக்கியது. தொடந்து படங்கள், மேடை நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்த் வருகின்றனர்.

Share this story