‘அட…..இந்த பதில்ல, நாங்க எதிர்பாக்கல’- “நம்பர் 1” குறித்து தடாலடி பதில் கொடுத்த' போனிகபூர்'.

photo

கோலிவுட்டின் இரு பெரிய தூண்கலான அஜித், விஜய் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ்ஸாகவுள்ளதால் ரசிகர்கள் உச்ககட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அஜித்தின்துணிவு’, விஜய்யின்வாரிசுஎன இரண்டு படத்தின் புரொமொஷனிலும் படக்குழு படு ஜோராக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகதுணிவுபடத்தின் தயாரிப்பாலரான போனிகபூர் நேர்காணல் ஒன்றில் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

photo

ஜன.11ம் தேதி வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் வெளியாகின்றன. இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய் என்று கூறினார்வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, விஜய் தான் நம்பர் 1 என பேசியது, விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தில்ராஜுவின் இந்த கருத்திற்கு போனிகபூர் தடாலடி பதில் கொடுத்துள்ளார்.

photo

அவர் கூறியதாவது “கதை தான் எப்போதும் 'நம்பர் 1'. பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய நடிகர்கள் இருந்தாலும், கதை நன்றாக இருந்ததால் தான் வரவேற்பை பெற்றதுஅதேபோல, லவ் டுடே படத்தில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லை என்றாலும் வெற்றி பெற்றது. தொடர்ந்து துணிவு குறித்து பேசிய அவர், நேற்று படத்தை பார்த்ததாகவும், அது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார். வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்ட அவர், வாரிசு படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Share this story