துணிவுடன் 'லவ் டுடே' குறித்த உண்மையை வெளியிட்ட தயாரிப்பாளர் போனிகபூர்.

photo

பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக்கை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் கைப்பற்றியதாக கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் செய்திகள் உலாவந்த நிலையில், அந்த தகவல் குறித்த உண்மை தன்மையை போனிகபூர் தெரிவித்துள்ளார்.

photo

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.90 கோடிக்கு மேல் கலெக்ஷனை அள்ளி வசூல் வேட்டை நடத்தியது.

photo

தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படத்தை தெலுங்கில் டப் செய்யது வெளியிட்டார் வாரிசு படத்தின் தயாரிப்பாளரான  தில் ராஜு. தமிழைப் போல் தெலுங்கிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் கைப்பற்றியதாக செய்திகள் பரவி வந்த நிலையில். அது உண்மையில்லை என அவர் ட்வீட் மூலமாக உறுதிபடுத்தியுள்ளார்.


 அவர் பதிவிட்டுள்ளதாவது: “லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை." என் தெரிவித்துள்ளார்.

Share this story