மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி- ‘பாஸ் என்கிற பாஸ்கரன் 2’.

photo

கடந்த 2010ஆம் ஆண்டு காதல், நகைச்சுவை திரைப்படமாக வெளியான படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. இயக்குநர் ராஜேஷின் இரண்டாவது படமாக வெளியான இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. கும்பகேணத்தில் படித்துவிட்டு வேலையில்லமல் சுற்றும் கதாநாயகன், சலூன் கடை நடத்தும் அவரின் நண்பன், கதாநாயகனின் அண்ணியின் தங்கையாக நயன்தாரா. வாழ்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக டுடோரியல் துவங்கி அதில் ஜெயிக்கிறார் ஆர்யா. இதுதான் படத்தின் கதை அதிலும் குறிப்பாக படத்தில் சந்தானம் பேசிய பல வசனங்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளது. ஆர்யா, சந்தானம், நயந்தாராவின் அட்டகாசமான கூட்டணியில் பலரது பாராட்டுகளை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

வரும் செப்டம்பரில் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம். இந்த படத்தின் மூலமாக சந்தானம் மீண்டும் காமெடியனாக களமிறங்க உள்ளாராம். ஆர்யாதான் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தொடர்ந்து படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story