'பாட்டல் ராதா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
1730298016000

'பாட்டல் ராதா' படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை, இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்து திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இந்த படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த வகையில், 'பாட்டல் ராதா' திரைப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mark the date! An emotional and chaotic storm is on its way 🤩#BottleRadha will be yours worldwide from December 20 #BottleRadhaFromDec20
— pa.ranjith (@beemji) October 30, 2024
A film by @Dhinakaranyoji
A @RSeanRoldan Musical
Produced by @beemji @officialneelam @balloonpicturez #ArunBalaji@gurusoms @sanchana_n… pic.twitter.com/31mXxzFncw