'சார்பட்டா பரம்பரை' பட நடிகர் காலமானார்.

photo

பிரபல குத்துச்சண்டை வீரரும், நடிகருமான ‘நாக்கவுட் கிங் பாக்ஸர் ஆறுமுகம்’ காலமானார். அவருக்கு வயது 68.

photo

சிறு வயதிலிருந்து குத்துசண்டை மீது தீராத காதல் கொண்டு முறைப்படி அதனை கற்று 1980களில் சார்பட்டா பரம்பரைக்காக விளையாடினார். அதுமட்டுமல்லாமல் 1985ஆம் ஆண்டு முன்னாள் முதலவர் ஜெயலலிதா அவர்களில் பாடிகாட் அகவும் இருந்துள்ளார். தொடர்ந்து வா குவாட்டர் கட்டிங், தண்ணில கண்டம், ஆரண்ய காண்டம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

photo

மூச்சுதிணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்தியுள்ளது. தொடர்ந்து குத்துசண்டை வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். கடந்த ஜூன்15ஆம் தேதி அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story