'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'பிரேக் அப் டா' பாடல் ரிலீஸ்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'பிரேக் அப் டா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'என்னை இழுக்குதடி' கடந்த மாதம் 22ம் தேதி வெளியானது.
Here's breakup anthem for the Heartbreakers and the Broken-hearted from #KadhalikkaNeramillai
— kiruthiga udhayanidh (@astrokiru) January 4, 2025
All set for this Pongal, January 14th, 2025!
🎙️@shrutihaasan , @AdithyarkM
▶️ https://t.co/FDNf7Tt1Yn
An @arrahman musical 🎶@actor_jayamravi @MenenNithya @astrokiru… pic.twitter.com/aX9tiCddU7
விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடி இருந்தனர். இப்படத்தின் 2வது பாடலான 'லாவெண்டர் நேரமே' பாடலை அலெக்ஸாண்ட்ரா ஜாய் மற்றும் ஆதித்யா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் 3வது பாடலான 'பிரேக் அப் டா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இப்பாடலை சிநேகன் எழுத, சுருதி ஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே இணைந்து பாடியுள்ளனர்.