‘மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்: சூர்யா குறித்து கார்த்தி

karthi

‘மெய்யழகன்’ பார்த்துவிட்டு சூர்யா என்ன சொன்னார் என்பதை கார்த்தி பகிர்ந்திருக்கிறார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தினை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.இந்தப் படத்துக்கு துபாயில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கெடுத்தனர். இதில் “சூர்யாவின் தயாரிப்பில் நடிப்பது எப்படி இருந்தது” என்று கார்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கார்த்தி, “ஒரு நாள் இரவு படப்பிடிப்புக்கு வந்து, எங்களை 2 மணி நேரம் தொந்தரவு செய்தார். அதைத்தாண்டி அவர் படப்பிடிப்புக்கு வரவே இல்லை. அதே போல், ‘மெய்யழகன்’ பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை எழுப்பி கட்டிப்பிடித்து பாராட்டினார். ‘பருத்திவீரன்’ படத்துக்குப் பிறகு கட்டிப்பிடித்துப் பாராட்டியது, இந்தப் படத்துக்கு தான்” என்று தெரிவித்துள்ளார்.’மெய்யழகன்’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை முடித்துவிட்டு, ‘சர்தார் 2’ படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் கார்த்தி.

Share this story