கவனம் ஈர்க்கும் ஜெயம் ரவியின் 'மக்காமிஷி' பாடல்

brother


இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர், இதில், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படமானது அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

brother

இந்நிலையில், ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் பிரதர் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மக்காமிஷி என்ற இந்த பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார். துள்ளலான இசை மற்றும் ஜெயரவியின் அசத்தலான நடனத்தை கொண்ட இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


 


 

Share this story