தணிக்கை குழுவிடம் U சான்றிதழை பெற்ற பிரதர் படக்குழு

brother
ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் ஜெயம் ரவியுடன், சரண்யா பொன்வண்ணன்,பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டீசர் மற்றும் மக்காமிஷி என்ற பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டாகியது. தற்பொழுது திரைப்படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு கொடுத்துள்ளது. படத்தின் காலநேரம் 2 மணி நேரம் 20 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் ஒரு அக்கா மற்றும் தம்பி பாசப்பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story