சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் BTS Comic Epi 4 ரிலீஸ்

surya

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் BTS Comic Epi 4 வெளியாகி உள்ளது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  மே 1-ம் தேதி வெளியாகவுள்ள  ‘ரெட்ரோ’ படத்தின் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் வைரலானது. அண்மையில் ‘ரெட்ரோ’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியானது. 



 படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வாரவாரம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் காமிக்கின் 4-வது எபிசோட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கண்ணாடி பூவே பாடல் உருவான விதத்தை பற்றி கூறியுள்ளனர். சென்னையில் BSNL ஆபிசில் தத்ரூபமான மதுரை
சிறைச்சாலை செட் அமைத்துள்ளனர். அதில் கண்ணாடி பூவே பாடலை படமாக்கியுள்ளனர். இந்த செட்டை பார்த்து சூர்யா மிகவும் ஆச்சர்யப்பட்டதாக அதில் கூறியுள்ளனர்.

Share this story