சூரி நடித்துள்ள 'மாமன்' படத்தின் BTS காட்சிகள் வெளியீடு...!

maman

சூரி நடித்துள்ள ‘மாமன்’ படத்தின் BTS காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. 

‘விலங்கு’ வெப்சீரிஸ் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள படம் ‘மாமன்’ . இந்த படத்தில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவனும் நடித்துள்ளார்.

 


‘கருடன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூரி நடிப்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்குள் பணிகளை முடிக்க படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. இப்படத்தினை ‘கருடன்’ படத்தை தயாரித்தே குமாரே தயாரித்துள்ளார். இந்நிலையில், படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Share this story