விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பிடிஎஸ் வீடியோ ரிலீஸ்

விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பிடிஎஸ் வீடியோ ரிலீஸ்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய் நாயகனாக நடித்திருப்பார். பூஜா ஹெக்டே முன்னணிக் கதாபாத்திரங்களிலும் செல்வராகவன், விடிவி கணேஷ், டாம் ஷைன் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மாலை தீவிரவாதிகள் ஹைஜேக் செய்வதும், அங்கு ரா ஏஜெண்ட்டாக இருந்த விஜய் மக்களை காப்பாற்றுவதுமாக கதைக்களம் அமைக்கப்பட்ட‘பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் வசூலில் நல்ல வரவேற்பு இருந்தது. 


இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு சண்டை பயிற்சியில் விஜய் ஈடுபட்ட காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

Share this story