ஆயுத பூஜைக்கு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட பன் பட்டர் ஜாம் படக்குழு
1728654316000

அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த "சைஸ் ஸீரோ" தேசிய விருதுபெற்ற "பாரம் " ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத். அதைத்தொடர்ந்து காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார். அடுத்ததாக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்பொழுது ஆயுத புஜை விழாவை முன்னிட்டு படக்குழு வாழ்த்து கூறி கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
Here is an awe-inspiring Glimpse from Team @rajuactor91's #BunButterJam wishing all a joyous #AyudhaPooja and #SaraswathiPooja, filled with blessings of knowledge and prosperity.
— Rain Of Arrows Entertainment (@RainofarrowsENT) October 11, 2024
A @nivaskprasanna Musical
Written & Directed by @RMirdath
Produced by @RainofarrowsENT @sureshs1202… pic.twitter.com/BsSLI6sx5C