பிரபல பாடகி ‘பாம்பே ஜெயஸ்ரீ’ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

photo

பிரபல கர்நாடக கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கோமாநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

photo

ஒப்பில்லா அழகிய குரலுக்கு சொந்தக்காரர் பாம்பே ஜெயஸ்ரீ. பல மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரது குரலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அவர்  சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையிலேயே மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுயநினைவை இழந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

photo

மிக மோசமானநிலையில் பாம்பே ஜெயஸ்ரீ உள்ளதாகவும், அவருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு, கோமா நிலைக்கு சென்றாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.  தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கணகாணிப்பில் உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த தகவல் அவரது ரசிகர்கள், மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story