கனடாவில் தயாரான தமிழ் படம் ‘ஆக்குவாய் காப்பாய்’
1725177625000
கனடாவில் வாழும் தமிழ்ப் பெண் ஒருவரின் போராட்டங்களைச் சொல்லும் படமாக, ‘ஆக்குவாய் காப்பாய்’ உருவாகியுள்ளது. லுனார் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், சகாப்தன் எழுதிய ‘அரங்காடல்’ என் நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதை அமைத்து, மதிவாசன் இயக்கியுள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் கிருந்துஜா, கனடாவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், டேனிஷ் ராஜ், செந்தில் மகாலிங்கம், மதிவாசன் சீனிவாசகம், சுரபி நடித்துள்ளனர். கனடாவில் படமாக்கப்பட்டுள்ள இதன் ஒளிப்பதிவை ஜீவன் ராமஜெயம், தீபன் ராஜலிங்கம் கவனித்துள்ளனர். ரிஜி ஆர்.கிருஷ்ணா இசை அமைத்துள்ளார்.