இணையத்தில் வைரலாகும் கேப்டன் மற்றும் குட்டி கேப்டன் ஏஐ வீடியோ..!

vijayakanth

தமிழ் சினிமாவின் நடிகரும்‌, தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு காலமானார்.‌ இவரது மறைவு ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

vijayakanth
அதைத்தொடர்ந்து ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்தை நடிகர் விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படத்தில் நடிக்க வைத்தனர். மேலும், அவரது மகன் சண்முக பாண்டியன் நடித்த  'படைத்தலைவன் படத்திலும் விஜயகாந்த் ஏஐ மூலம் காட்சிப்படுத்தப்பட்டார்.

 


இந்நிலையில், தற்போது விஜயகாந்த்தின் மற்றொரு ஏஐ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நீ போட்டு வைத்த தங்க குடம் பாடல் பின்னணியில்,  விஜயகாந்த் மற்றும் குட்டி விஜயகாந்த் உடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 
 

Share this story