தனுஷுடன் இணையும் பிரபல கன்னட நடிகர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வாத்தி’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல கன்னட நடிகரான டாக்டர் சிவ ராஜ்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.