‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் பாடிய ‘கில்லர் கில்லர்’ பாடல் வெளியீடு.
1700658315779

தனுஷின் அதிரடி ஆக்ஷனில் தயாராகிவரும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘கில்லர் கில்லர்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்திய ஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். தொடர்ந்து விநாயகன், சந்தீப் கிஷான், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது படத்தில் தனுஷ் பாடிய ‘கில்லர் கில்லர்’ பாடல் வெளியாகியுள்ளது.
ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.