தனுஷின்‘கேப்டன் மில்லர்’ படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு.

நடிகர் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படம்’ கேப்டன் மில்லர்’. இவர்களோடு இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஷிவ ராஜ்குமார் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 1930-40 களில் நடக்கும் கதையாக அமைய உள்ளது. படத்தின் படப்பிடிப்பிற்காக தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஒரு செட் அமைத்துள்ளனர். தனுஷ் உட்பட படத்தின் மற்ற நட்சத்திரங்கள் முன்னதாக டிசம்பரில் ஒரு ஷெட்யூலை முடித்தனர். பின்னர் தங்கள் குடும்பத்துடன் பண்டிகை நாட்களை கொண்டாடும் விதத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது.அதாவது படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் படத்திற்காக செட் அமைக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஒரு ஒரு காட்சிக்காகவும் படக்குழு எவ்வளவு உழைத்துள்ளனர் என இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு பீரியாடிக் படம் என்பதால ஆர்ட் பணிகள் கனக்கச்சிதமாக செய்ய வேண்டும் என்ற முனைப்புடம் படக்குழு பணியாற்றியுள்ளனர். இறுதியாக தனுஷ் கைய்யில் துப்பாக்கியுடன் மாஸ்ஸாக நிற்பதுபோல முடிகிறது. தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்.