‘கேப்டன் மில்லர்’ படத்திலிருந்து விலகிய வில்லன் நடிகர்.. காரணம் என்ன தெரியுமா ?

captain miller

 தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலிருந்து நடிகர் டேனியல் பாலாஜி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகி வருகிறது.  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு ப்ரீயட் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

captain miller

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், அமெரிக்கன் நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் டேனியல் பாலாஜி நடித்து வந்தார். அவர் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. முக்கிய வில்லனாக நடித்து வந்த அவர், திடீரென விலகிவிட்டார். இதற்கு காரணம் படத்திற்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் விட படத்தின் படப்பிடிப்பு தாமதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதனால் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story