‘கேப்டன் மில்லர்’ செகண்ட் சிங்கிள் அப்டேட்!.....

photo

‘கேப்டன் மில்லர்’ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


நடிகர் தனுஷின் ஆக்ஷன் அதிரடியில் தயாராகிவரும் படம்கேப்டன் மில்லர்’. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். படத்தில் பிரியங்க்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ‘கில்லர் கில்லர்’ என்ற முதல் பாடல் வெளியானதை தொடர்ந்து இரண்டாவது பாடல் குறித்த தகவல் வந்துள்ளது.

அதன்படி, நாளை மாலை 5மணிக்கு உன் ஒலியிலே என்ற இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த பாடலின் தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனும் வெளியாகவுள்ளது.

Share this story