ஷூட்டிங்கை நிறைவு செய்த கன்னட நடிகர்... ‘கேப்டர்’ மில்லர் முக்கிய அப்டேட்

captain miller

‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு ப்ரீயட் படமாக இப்படம் உருவாகி வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

captain miller

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், அமெரிக்கன் நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

captain miller

இந்நிலையில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. அவர் படப்பிடிப்பை நிறைவு செய்தததை அடுத்து படக்குழுவினருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

Share this story