‘கேப்டன் மில்லர்’ படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ!
1704555584009

தனுஷின் அதிரடி ஆக்ஷனில் ரிலீசுக்கு தயாராகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியாடிக் படமாக தயாராகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.