‘கேப்டன் மில்லர்’ –‘உன் ஒளியிலே’ பாடல் வெளியீடு.

photo

‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையில்  செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

photo

நடிகர் தனுஷின் ஆக்ஷன் அதிரடியில் தயாராகிவரும் படம்கேப்டன் மில்லர்’. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். படத்தில் பிரியங்க்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ‘கில்லர் கில்லர்’ என்ற முதல் பாடல் வெளியானதை தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தனுஷ் மற்றும் பிரியங்கா அருள் மோகனுக்கு இடையிலான இந்த பாடலை கபீர் வாசுகி எழுதியுள்ளார். பாடலை சீன் ரோல்டன் பாடியுள்ளார். ‘உன் ஒளியிலே’ என துவங்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Share this story