மீண்டும் தொடங்கிய ‘கேப்டன் மில்லர்’... ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் அதே இடத்தில் தொடங்கியது !

captain miller shooting

தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு ப்ரீயட் படமாக இப்படம் உருவாகி வருகிறது. சத்captain miller shootingய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், அமெரிக்கன் நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஷூட்டிங்கிற்கு மாவட்ட ஆட்சியர் திடீரென நேற்று தடை விதித்தார்.

 

இதற்கு காரணம் புலிகள் சரணாலய வன பகுதியில் தொடர்ந்து குண்டுவெடிப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அதேநேரம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வந்தனர். அதனால் ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் போதிய ஆவணங்கள் இன்று காலை சமர்பிக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் நடத்த படக்குழுவினருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் அதே இடத்தில் விதிகளுக்கு உட்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 

Share this story