நள்ளிரவில் வெளியாகும் ‘கேப்டன் மில்லர்’ டீசர்.. மாஸான தனுஷின் போஸ்டர் வெளியீடு !

dhanush

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ டீசர் நாளை நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திரைப்படமாக மாறிவிட்டது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’.  ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. 

dhanush

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக உருவாகி வரும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் பிறந்தநாளையொட்டி வெளியாகும் 

 

Share this story