தொடர்ந்து டிரெண்ட்டிங்கில் ‘கேப்டன் மில்லர்’ டீசர்... தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு !

captain miller

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ டீசர் தொடர் டிரெண்ட்டிங்கில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராக்கி, சாயிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் வழக்கமான படம் போன்று இல்லாமல் இந்த படம் மாறுப்பட்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நீண்ட தாடி மீசையுடன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. 

captain miller

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளையொட்டி நேற்று நள்ளிரவு இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீசர் யூடியூப்பில் வெளியாகி 17 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. தற்போது வரை தொடர்ந்து டிரெண்ட்டிங்கில் முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

Share this story