கேப்டன் மில்லர் படத்திற்கு சர்வதேச விருது..! பாராட்டு மழையில் தனுஷ்

1

தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கோகென், இளங்கோ குமாரவேல் எனப் பலர் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர்.இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

தனது கிராமத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு இருக்கும் மரியாதை மற்றும் பயத்தைப் பார்த்து அவர்களின் படையில் சேர்வதுதான் சிறந்தது என எண்ணி பிரிட்டிஷ் படையில் சேர்கிறான் ஈசன் (தனுஷ்).ஆனால் தன் கிராமத்து மக்களையே பிரிட்டிஷ் படைகள் கொன்று குவிக்கும்போதுதான் தன் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதை எண்ணி, மனம் வருந்தி பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறுகிறான்.பின்னர் தன் வாழ்வின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் செய்யும் கேப்டன் மில்லராக மாறுகிறான் ஈசன்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. இந்நிலையில், லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃப்லிம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தது.

இந்த பிரிவில் கேப்டன் மில்லர் மற்றும் Bhakshak ஆகிய இரு திரைப்படங்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தது. You Are Not Alone: Fighting the Wolf Pack (Spain), The Parades (Japan), Red Ollero: Mabuhay is a Lie (Philippines), Sixty Minutes (Germany), The Heartbreak Agency (Germany) ஆகிய படங்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.இதில் Best Foreign Language Film 2024 என்கிற விருதை கேப்டன் மில்லர் திரைப்படம் கைப்பற்றியுள்ளது. 


 

Share this story