பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டனின் உடல்.

photo

இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள கேப்டனின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்த சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

photo

மக்களின் ரியல் ஹீரோவாக வாழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை சென்னை தீவுதிடலில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

photo

தொடர்ந்து “கேப்டனின் உடல் தீவுதிடல் இருந்து மதியம் 1.00 மனியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிசடங்கானது  மாலை 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது” என அந்த அறிவிப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

Share this story