மனங்களை சம்பாதித்த மாமனிதனின் இறுதி ஊர்வலம் இதோ!
1703841645266

மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சற்று முன்னர் துவங்கியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் ஹீரோவாக நடித்து கிட்டதட்ட 13ஆண்டுகள் கடந்துவிட்டது, திரையில் தோன்றி 8 ஆண்டுகள் ஆகி விட்டன . பொது கூட்ட மேடையில் பேசி பல ஆண்டுகள் கடந்து விட்டது இருந்து கூட்டம் கூட்டமாய் மக்கள் குவிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது வாழ்நாளில் கேப்டன் எவ்வளவோ பணம் சம்பாதித்திருக்கலாம், ஆனால் அவர் சம்பாத்தித்த உண்மையான சொத்து இந்த மக்கள் மட்டுமே…. இறுதிவரை விடிய விடிய கேப்டனின் முகத்தை ஒரு முறையாவது காண வேண்டும் என சாலையில் காத்திருந்தனர் மக்கள். இதெல்லாம் அவரின் உண்மையான அன்பால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட மாமனிதனின் இறுதி ஊர்வலம் ஈவெரா சாலை வழியே துவங்கியுள்ளது.