கார் பார்க்கிங் தகராறு; பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் கைது

dharshan

கார் பார்க்கிங் தொடர்பான தகராறில் நீதிபதி மகனை தாக்கியதால் பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சென்னை முகப்பேர் கிழக்கில் கார் நிறுத்தியது தொடர்பான தகராறில் நீதிபதி மகன், பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், நீதிபதியின் மகனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கார் பார்க்கிங் தகராறில் நீதிபதியின் மகனை தாக்கிய புகாரில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

dharshan

மேலும், தர்ஷன் கொடுத்த புகாரின் பேரில் நீதிபதியின் மகன், மனைவி மற்றும் மாமியார் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இருதரப்பினரிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் பார்க்கிங் தகராறு காரணமாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  

Share this story