கார் ரேசிங்: 270 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த அஜித் கார்...

நடிகர் அஜித் குமார் ஸ்பெயினில் கார் ரேசிங் போட்டியில் மணிக்கு 270 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித்தின் நடிப்பில் அண்மையில் ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்து திரைக்கு வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
The speed merchant betters his own record and heading to be the best.#ajithkumar #ajithkumarracing pic.twitter.com/ktVx4Cf0fR
— Suresh Chandra (@SureshChandraa) March 4, 2025
இதனிடையே அஜித் தற்போது ஸ்பெயின் நாட்டில் கார் ரேசிங்கில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பந்தயத்தின் போது மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, ஏற்கனவே 240 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஒட்டிய படைத்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.