காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையால் தமிழ் திரைப்படங்களின் வெளியீடு பாதிப்பு

காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையால் தமிழ் திரைப்படங்களின் வெளியீடு பாதிப்பு 

காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம், கர்நாடகாவில் தமிழர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும், தமிழ் படங்களும் பாதிக்கப்படும். இன்று கர்நாடகாவில் பந்த் நடந்து வருகிறது. மேலும், பிரச்சனையும் தீவிரம் அடைந்துள்ளது.இந்நிலையில், வரும் அக்டோபர் 19-ம் தேதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. கன்னடத்திலும் லியோ படத்தை டப் செய்து, வெளியிட உள்ளனர். நேரடியாகவும் கர்நாடகா முழுவதும் லியோ படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அம்மாநில உரிமையாக 15 கோடி ரூபாய் வியாபாரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் 75 கோடி வசூல் செய்த நிலையில், லியோ அதையும் தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காவிரி பிரச்சனையால், கர்நாடகாவில் லியோ படத்தின் வெளியீடு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

Share this story