கிங்ஸ்டன் படத்தின் `Celebration Of Death' பாடல் ரிலீஸ் அறிவிப்பு

gvp

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் `Celebration Of Death' பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2021- ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. 


தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இரண்டாம் பாடலான Celebration Of Death வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Share this story