ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்.... ரஜினி, தமன்னா பங்கேற்பு...

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்.... ரஜினி, தமன்னா பங்கேற்பு...

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினி, தமன்னா, சுனில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியான  இந்த படத்தில்  ரஜினியுடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். 

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்.... ரஜினி, தமன்னா பங்கேற்பு...

இத்திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து, ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு சொகு கார்களை, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்தார். மேலும், படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயமும், சன் குழும ஊழியர்களுக்கு வெள்ளி நாணயமும் பரிசளிக்கப்பட்டது. 


இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், படத்தில் நடித்திருந்த ரஜினி, தமன்னா, சுனில், அனிருத், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

Share this story