துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " உதயநிதி ஸ்டாலின் அண்ணாவிற்கு எனது வாழ்த்துகள். இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்" என்றார். நடிகர் தனுஷ் தனது வாழ்த்து செய்தியில், "தமிழகத்தின் துணை முதலமைச்சரான அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார். நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், "தமிழகத்தின் மாண்புமிகு துணை முதல்வராக புதிய பொறுப்பை ஏற்றுள்ள அன்புள்ள உதயஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என்றார். இயக்குனர் வெங்கட் பிரபு தனது வாழ்த்து செய்தியில், "உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் உதயநிதி! நீங்கள் துணை முதல்வராகவும், தலைவராகவும், நம் மக்களுக்கு அற்புதங்களைச் செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்து செய்தியில், "இன்று தமிழ்நாட்டின் துணைமுதல்வராக பொறுப்பேற்றிற்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய உதயநிதி அவர்களின் பேராற்றல் மிக்க பணி சிறக்கவும் புகழ் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்" என்றார். நடிகர் அருள்நிதி, " வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் அண்ணா" என குறிப்பிட்டுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, "வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின். நீங்கள் பலமாக வளர்ந்து வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்றார். இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், "வாழ்த்துகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார். கடமையில் இளம் மற்றும் ஆற்றல் மிக்க அடக்கமான முடிவு சரியான நேரத்தில் சரியான விஷயம் நடந்தது " என்றார். இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், "துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அன்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்" என்றார். துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும், நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்" என குறிப்பிட்டிருந்தது.