மஞ்சுவாரியர் முதல் சிவானி’ வரை செலிபிரிட்டிகளின் ஓணம் கிளிக்ஸ்.

photo

சமூகவலைதள பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்வது, ரீல்ஸ் செய்து வெளியிடுவது என பல சினிமா செலிபிரிட்டிகள் இதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் ஓணம் திருநாளை முன்னிட்டு பலரும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

photo

photo

மஞ்சுவாரியர்:

மலையாள நடிகையான  மஞ்சுவாரியர், தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான  அசுரன் படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தொடர்ந்து தல அஜித்தின் துணிவு படத்தில் நடித்தார். அடுத்து தலைவரின் 170வது படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் ஓணம் திருநாளை முன்னிட்டு மஞ்சுவாரியர் அழகிய புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

photo

photo

ஷிவானி நாராயணன்:

சின்னத்திரையில் சீரியல்களில் சைட் ரோலில் நடித்து பின்னர் நாயகியாக உயர்ந்தவர் ஷிவானி. தொடர்ந்து வெள்ளித்திரையிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதை முக்கிய வேலையாக பார்த்துவரும் ஷிவானி தற்போது ஓணம் ஸ்பெஷலாக செம அழகாக புடவையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

photo

ரித்திகா:

தமிழ் சின்னத்திரை பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ரித்திகா. 'ராஜா ராணி' சீரியல் மூலம் அறிமுகமான இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.தொடர்ந்து சீரியலில் நடித்துவந்த இவர் சில நாட்களுக்கு முன்னர் சீரியலில் இருந்து விலகினார். தற்போது ஓணம் கொண்டாடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

photo

ஷிவாங்கி:

 விஜய் டிவியின் குட்டி குழந்தையாக வலம்வரும் ஷிவாங்கி, சூப்பர் சிங்கர் மூலமாக அறிமுகமானாலும் பிரபலமானது குக் வித் கோமாளியாகத்தான், அதில் அவர் கோமாளியாக கலந்துகொண்டு சேட்டைகள் அனைவரையும் கவர்ந்தது. அதோடு இவர் நிறுத்திக்கொள்ளாமல் குக்காகவும் களமிறங்கி அசத்தினார். இவர் தற்போது பாவாடை சட்டையில் வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

Share this story