ரசிகர்களுடன் 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத், திரிஷா, ஆரவ்

trisha

அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்தது. மேலும், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி இன்று 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளதை அடுத்து, ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


நடிகர் அஜித்தின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். இதனிடையே, 'விடாமுயற்சி' படம் வெளியானது. ரசிகர்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் உற்சாகம் தான் என்று திரைப்பிரபலங்களும் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். காலை 9 மணிக்கு வெளியான 'விடாமுயற்சி'யின் சிறப்பு காட்சியை காண இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் வெற்றி திரையரங்கிற்கு வந்தனர்.


9 மணிக்கு தொடங்கிய சிறப்பு காட்சியை இருவரும் ரசிகர்களுடன் கண்டு களித்தனர். கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு Good Bad Ugly படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் 'விடா முயற்சி' படத்தில் நடித்த நடிகர் ஆரவ் ஆகியோர் சிறப்பு காட்சியை காண வந்தார். அப்போது ஆரவ் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனிடையே, 'விடாமுயற்சி' படத்தின் வெளியிட்டை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story