ஜென்டில்வுமன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்கிய தணிக்கை குழு...!

gentel women

ஜென்டில்வுமன் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கி உள்ளது.  


கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது. திருமணம் ஆன ஹரி கிருஷ்ணன் லாஸ்லியாவுடன் தொடர்பு வைத்துள்ளார். லிஜோமோல், லாஸ்லியா மற்றும் ஹரி கிருஷ்ணன் இந்த மூவருக்கும் இடையே உள்ள தொடர்பை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.



 
இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. அண்மையில், படத்தின் டிரெய்லர் மற்றும்  'சுளுந்தீ' எனும்  பாடல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஜென்டில்வுமன் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கி உள்ளது.  

Share this story