சந்திரமுகியாக மாறிய கங்கனா ரனாவத்.. புதிய போஸ்டர் வெளியீடு !

Chandramukhi2

 சந்திரமுகி தோற்றத்தில் நடிகை கங்கனா இருக்கும் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

‘சந்திரமுகி’ மாபெரும் வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாகவும், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Chandramukhi2 🗝️

இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பல கட்டமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வேட்டையன் லுக்கில் ராகவா லாரன்ஸ் இருக்கும் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சந்திரமுகி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ள போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.  

Share this story