ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'சந்திரமுகி 2'... எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் !

chandramuki 2

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சந்திரமுகி 2' படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

chandramuki 2

 கடந்த 2005-ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த திரைப்படம் ‘சந்திரமுகி’. நடிகை ஜோதிகா சந்திரமுகியாக மிரட்டியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வடிவேலு, நயன்தாரா, பிரபு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

chandramuki 2

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. பி.வாசுவே இயக்கியுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார். சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

chandramuki 2

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட தயாரித்து வரும் இந்த படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுபெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

Share this story